தைப்பிங்கை உலுக்கிய பயங்கரம்: குழந்தைகள் இல்லத்தில் தீ..!

0

இங்குள்ள ஜாலான் ஸ்டேசன் பகுதியில் இந்தியர்களின் பராமரிப்பில் இருந்து வரும் நான்கு மாடிகள் கொண்ட குழந்தைகள் இல்ல கட்டடம் தீ அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டதன் வழி அங்கிருந்த 28 குழந்தைகள் உயிர் தப்பின.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை மணி 5.30 அளவில் நடைபெற்றதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நான்குமாடிகள் கொண்ட அவ்வில்லத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் தீ பிடித்து எரிந்ததாக கூறப்பட்டது. தீப்பிடித்து எரிந்ததை கண்ட இல்லத்தின் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றதுடன் உடன் தைப்பிங் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது மாடிக்குச் சென்று தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேல் விபரங்களை கூற மறுத்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 12 =