தைப்பிங்கில் கோவிட் – 19 சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

அண்மையில் சில வாரங்களாக பேரா மாநிலத்தில் கோவிட்-19 தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், தைப்பிங்கில் சில பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தைப்பிங் நகராண்மைக் கழகத்தின் நகர்ப்புற சேவை மற்றும் சுகாதார இலாகா இங்குள்ள மீன், காய்கறி, இறைச்சி மார்க்கெட் உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளிலும் சுத்தம் செய்யப்பட்டதோடு, கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
கோவிட் – 19 தொற்றின் ஆபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, அரசாங்கம் அறிவித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டுமென தைப்பிங் நகராண்மைக் கழகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 19 =