தே.மு. தலைவராக நஜிப்பை மீண்டும் நியமனம் செய்யுங்கள்

தேசிய முன்னணியை வலுப்படுத்த அந்த கூட்டணியின் தலைவராக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் ஜமால் முகமட் யூனுஸ் வலியுறுத்தினார்.
அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்பாக அம்னோ மற்றும் தேசிய முன்னணியை வலுப்படுத்தவும் மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறவும் இந்த நியமனம் அவசியம் என அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் தேசிய முன்னணியின் ஆலோசனை வாரியத்தின் தலைவராக மட்டும் நஜிப் இருப்பதால், ஓரளவு மட்டுமே அந்த முன்னாள் அம்னோ தலைவரால் செயல்பட முடியும் என அவர் சொன்னார்.
வழக்கமாக அம்னோ தலைவர்தான் தேசிய முன்னணி தலைவராக பதவி வகிப்பார். அதே வேளையில், தற்போதைய அம்னோ தலைவர் சைட் ஹமிடி ஆற்றலற்றவர் என்று தாம் கூறவில்லை. ஆனால், சைட் ஹமிடிக்கு பக்கபலமாக இருந்து உதவ நஜிப்பால் முடியும் என அவர் சொன்னார்.
இதனிடையே, ஜமால் யூனுஸின் இந்த ஆலோசனையை முன்னாள் லெம்பா பந்தாய் அம்னோ தலைவர் ராஜா நோங் சிக் ராஜா ஸைனால் அபிடின் நிராகரித்தார். காரணம், வழக்கமாக அம்னோ தலைவர்தான் தேசிய முன்னணி கூட்டணியின் தலைவராக இருந்து வந்துள்ளதாக அவர் சொன்னார். தற்போது நஜிப் நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ள தால் முதலில் அந்த முன்னாள் பிரதமர் இந்த வழக்குகளிலிருந்து விடுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
வழக்குகளிலிருந்து நஜிப் விடுபட்ட பிறகு அடுத்த கட்சித் தேர்தலில் நஜிப் போட்டியிடலாம் என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =