தேர்வு குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை

0

இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் இந்திய மாண வர்கள், தேர்வு குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டிய அவசிய மில்லை என ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எம்.ராமகிருஷ்ணன் கூறினார்.
தேர்வுக்குத் தயாராகி அதில் கவனம் செலுத்தினால் சிறப்புத் தேர்ச்சியை நிச்சயம் பெறமுடியும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் எஸ்பிஎம் தேர்வு வழிகாட்டி பயிற்சிப் பட்டறையில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு பேசினார்.
தற்போதைய வாழ்க்கைச் சூழ்நிலைக்கும் அபரிமிதமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையில் மாணவர்கள் தங்களின்
பொது அறிவையும் சுய திறன்களையும வளர்த்துக் கொள்வது
அவசியம் என அவர் வலியுறுத் தினார்.
இடைவிடாத பயிற்சியும் முயற்சியும்தான் நமது இந்திய மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சிப் பட்டறையில் எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாதிரி வினாக்கள், தேர்வை எதிர்நோக்கும் அணுகுமுறைகள் மற்றும் தேர்வின் கட்டமைப்பு முறைகள் பற்றிய விபரங்களை மாணவர்கள் இப்பட்டறையின் வாயிலாக அறிந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − thirteen =