தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அனிபா அமான் வழக்குப் பதிவு

0

கடந்த மே மாதம் நடைபெற்ற கிமானிஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான், தேர்தலை முறையாக நடத்தத் தவறியதற்காக தேர்தல் ஆணையம் மீது வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாக அவரது சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.
அனிபாவின் வழக்கறிஞர்கள் இன்று திங்களன்று வழக்குத் தாக்கல் செய்வார்கள் என்று ஜேம்ஸ் லிகுஞ்ஜாங் கூறினார்.
“சட்டத்தின் படி கிமானிஸ் நாடாளுமன்றத் தேர்தல் செயல்முறையை இயக்கத் தவறியதற்காகவும், கிமானிஸ் தேர்தல் மனுவில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் தற்காத்துக் கொள்ளத் தவறியதற்காகவும் அனிபா தேர்தல் ஆணையத்திடம் இழப்பீடு கோருகிறார்” என்று முன்னாள் பெத்தாகாஸ் சட்டமன்ற உறுப்பினர் லிகுஞ்ஜாங் கூறினார்.
தேர்தல் செயல்முறையை மேற்கொள்வதில் முரண்பாடுகள் மற்றும் தேர்தல் சட்டங்களை பின்பற்றாதது போன்ற தவறுகளைத் தேர்தல் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இது தேர்தலின் முடிவை பாதிக்கக்கூடும் என்று அது கூறியுள்ளது.
தனது தேர்தல் மனுவில், 156 வாக்குகள் வித்தியாசத்தில் அனிபாவிடம் தோற்ற வாரிசான் வேட்பாளர் கரீம் புஜாங், தேர்தல் ஆணையத்தின் தரப்பில் வாக்குச்சீட்டில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறினார். இதனால் அனிபா லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
பாரங்கள் 13 மற்றும் 14ஐ கையாள்வதில் தேர்தல் ஆணையம் முறைகேடாக செயல்பட்டதாக தேர்தல் நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இது 341 வாக்குச்சீட்டுகளை பாதித்துள்ளது. எவ்வாறாயினும், அனிபா மீதான லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை அது கைவிட்டது.
இந்த மும்முனை போட்டியில், அம்னோ சார்பில் போட்டியிட்ட அனிபா, 11,786 வாக்குகளைப் பெற்ற நிலையில் கரீமுக்கு 11,942 வாக்குகள் கிடைத்துள்ளன. பார்ட்டி ஹராப்பானின் ஜாஃபர் இஸ்மாயில் வெறும் 1,300 வாக்கு ஞு
களைப் பெற்றார். அனிபா பின்னர் அம்னோவை விட்டு வெளியே றினார். மத்திய நீதிமன்றத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகக் கூறி, இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =