தேமு தோழமைக் கட்சிகள் பொதுத்தேர்தலுக்குத் தயாராக வேண்டும்!

விரைவில் நடைபெறவிருக் கும் என எதிர்பார்க்கப்படும் 15ஆவது பொதுத் தேர்தலுக் குத் தயாராகும்படி தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளுக்கு அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹஸான் கோரிக்கை விடுத்தார்.வரும் 15ஆவது பொதுத் தேர்தலை தேமு மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் பிளவு படாமல் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நேற்று இங்கு புத்ரா உலக வாணிப மையத்தில் தேமு பங்காளிக் கட்சிகளுடன் நடத்திய ஒரு சிறப்பு சந்திப்பிற்குப் பிறகு தேமு துணைத் தலைவருமான அவர் பேசினார். கடந்த பொதுத் தேர்தல்கள், இடைத்தேர்தல் களில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு இந்த தோழமைக் கட்சிகள் அயராது பாடு பட்டதாக ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார். தேமு தோழமைக் கட்சிகளின் பங்களிப்பை குறிப்பாக அம்னோ ஒரு போதும் மறந்து விடாது என அவர் தெளிவுபடுத்தினார். கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி தோல்வி கண்ட போதிலும் தேமு ஒருபோதும் துவண்டு விடவில்லை என்றார் அவர். ஆகையால் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு அதன் பங்காளிக் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என முகமட் ஹஸான் வலியுறுத்தினார். அதே வேளையில், இனி வரும் காலங்களில் 2 மாதங்களுக்கு ஒரு முறை தேமு தோழமைக் கட்சிகளுடன் தாம் சந்திப்பு நடத்தவிருப்பதாக அவர் சொன்னார். நேற்று நடந்த இக்கூட்டத்தில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சித் தலைவர் டான்ஸ்ரீ நல்லா கே.எஸ்., ஐபிஎப் கட்சியின் துணைச் செயலாளர் கணேசன், கிம்மா தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், பிசிஎம் கட்சியின் தலைவர் டத்தோ ஹுவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 11 =