தேநீர் பருகுவதன் நன்மைகள்

நாம் விரும்பி அருந்தும் தேநீரில் நம் உடலுக்கு வைட்டமின் கே, போலிக் அமிலம், பொட்டாசியம், ப்ளுரின், மேங்கனீஸ் போன்ற தாது பொருட்கள் உள்ளன. தேநீரில் அதிகளவு ஆன்டிஆக்சிடன்ஸ் உள்ளது. இது உடலில் செல்சிதைவை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதை குறைக்கிறது. 
கணையம், வயிற்றுப்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. கிரீன் டீ உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட புற்றுநோயை தடுக்க உதவும். ஊலாங் டீ மற்றும் கிரீன் டீ அருந்துவதால் உடலில் ரத்த அழுத்தம் சீராகிறது. ரத்த குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்கி பக்கவாத நோய் ஏற்படுவதை தடுக்கும்.

தேநீரில் இருந்து பற்கள் உறுதியாக இருக்க தேவையான புளூரைடு ஒரு கோப்பைக்கு 1 மில்லி கிராம் வீதம் கிடைக்கிறது.
தேநீர் அருந்துவதால் புறஊதா கதிர்களில் இருந்து சருமம் பாதுகாக்கப்பட்டு சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. நாம் பயன்படுத்தும் பல அழகு சாதன பொருட்களில் தேயிலை ஓர் முக்கிய மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகிறது. சாயம் கலந்த தேநீர் அருந்துவதை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாப்போம்.
குளிர்ந்த நீரில் தேயிலைத்தூளை சேர்க்கும் போது, உடனடியாக சாயம் இறங்கினால் அந்த தேயிலைத்தூளில் சாயம் கலந்து இருக்கும். அவ்வாறு கலப்படம் செய்த தேயிலைத்தூளை தவிர்ப்போம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here