தேடப்படும் ஜோலோவை கைது செய்து மலேசியாவுக்கு கொண்டு வாருங்கள் டத்தோ அமாட் மஸ்லான் வேண்டுகோள்

0

1எம்டிபிபி ஊழல் தொடர்பில் தேடப்பட்டு வரும் சர்சைக்குரிய ஜோலோவை கைது செய்து நாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜொகூர் பொந்தியானைச் சேர்ந்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அமாட் மஸ்லான் கேட்டுக் கொண்டார்.
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெ.4 கோடியே 20 லட்சம் நிதியை மோசடி செய்ததாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவருக்கு 12 ஆண்டு சிறையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
நஜிப் துன் ரசாக் வழக்கு தொடர்பில் ஜோ லோவும் கைது செய்யப்பட வேண்டும் என்று மலாக்கா ஹாங்துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் சம்சூல் இஸ்கந்தர் பேசிக் கொண்டிருந்தபோது இடைமறித்த டத்தோ அமாட் மஸ்லான், ஜோ லோ கைது செய்யப்பட்டு மலேசியாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றார். ஜோ லோ மட்டும் அல்ல, மாறாக ஏமாற்றியவர்கள் எல்லாம் நாட்டை விட்டு ஓடி விட்டார்கள். இதில் மலாய்காரரும் இருக்கிறார். எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி நிக் பைசால் அரிப் காமிலும் ஓடி விட்டார். மேலும் பலரும் ஓடிவிட்டார்கள்.
இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =