தேசிய விளையாட்டு தினம்… காணொலி காட்சி வாயிலாக விளையாட்டு விருதுகளை வழங்கிய ஜனாதிபதி

ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருதுகளை ஜனாதிபதி வழங்குவார்.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி மூலமாக தேசிய விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான விருதுகளை வழங்கினார். விக்யான் பவனில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்திர துருவ் பாத்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விளையாட்டு விருதுகள்

இதேபோல் நாட்டின் பல்வேறு விளையாட்டு ஆணைய மையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்று விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சி நடைபெற்ற அனைத்து இடங்களிலும் சுகாதார அமைச்சத்தின் அனைத்து பின்பற்றப்பட்டன. 
ரோகித் சர்மா (கிரிக்கெட்), மாரியப்பன் (பாரா உயரம் தாண்டுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), ராணி (ஹாக்கி) ஆகியோருக்கு இந்த ஆண்டின் மிக உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதுவரை இல்லாத வகையில், 5 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ரோகித், வினேஷ் போகத் தவிர தவிர மற்ற மூவருக்கும் இன்று விருது வழங்கப்பட்டது. இஷாந்த் சர்மா, தீப்தி சர்மா, அடானு தாஸ், திவிஜ் சரண் உள்ளிட்ட 27 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
தேசிய விளையாட்டு விருது வழங்கும் நிகழ்ச்சியானது கொரோனா அச்சம் காரணமாக முதல் முறையாக காணொலி வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + fifteen =