‘மற்றவர்களை விட தாங்கள்தான் வல்லவர்கள்’ என்ற மனப்போக்கை தேசிய முன்னணி மாற்றிக்கொள்ள வேண்டும் என அந்தக் கூட்டணியின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கூறினார்.
வரும் 15ஆவது பொதுத் தேர்தலை புதிய சிந்தனையுடன் தேசிய முன்னணி கூட்டணி எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டு மானால் தேசிய முன்னணி பழைய தோற்றத்தைக் கைவிட வேண்டும் என கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான அவர் சொன்னார்.
தேசிய முன்னணி தலைவர்கள் தங்களுடைய போக்கை மாற்றிக்கொள்வ தோடு புதிய அணுகுமுறைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் தேசிய முன்னணி கூட்டணிக்கு சவால்மிக்க ஒரு தேர்தல் என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.
கோவிட்-19 தாக்கம் தணிந்ததும் 15ஆவது பொதுத் தேர்தல் நடைபெறலாம் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அண்மையில் கோடி காட்டியிருந்தார்.