கோலாலம்பூரில் அமைந்துள்ள தேசிய மிருகக்காட்சி சாலை நிதிப் பிரச்சினையில் சிக்கியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பல ஆண்டுகளாக இயங்கி வரும் அதன் தற்போதைய நிதி கையிருப்பு 3 மாதங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும் என்ற அதிர்ச்சியான செய்தி கவலையை ஏற்படுத்துகிறது.
இப்பூங்கா அரசின் கீழ் இயங்காமல் மலேசிய விலங்கியல் கழகத்தின் மூலம் செயல்படுவதால் ஒரு கட்டுப்பாட்டோடு இயங்காமல், அதில் சீர்கேடு மலிந்து வருவதாக அதில் பணியாற்றிய முன்னாள் விலங்கியல் தலைமை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டாக்டர் எஸ்.வெள்ளையன் மற்றும் டாக்டர் ரேஸா சிங்கம் பேசுகையில், இந்த விலங்கியல் பூங்கா 60 ஆண்டுகாலம் பின்தங்கி இருப்பதாகவும் நிர்வாகம் சரியாக இயங்கவில்லை என்றும், அதன் கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் தகுதியற்றவர்கள் அங்கு வேலை செய்வதால், மிருகங்களைப் பராமரிப்பதில் முறைகேடு நடப்பதாகவும், விலங்குகளுக்கு செலவிடப்படும் தொகை களவாடப்படுவதாகவும், நுழைவு டிக்கெட்டுகளைத் திருடி, கள்ளத்தனமாக
விற்றுப் பணம் சம்பாதிப்படுவதாகவும் அவர்களிருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
அங்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டப்படுகிறது. விலங்கு சம்பந்தமான விவரங்கள் தெரியாதவர்களின் தலைமையில் அது இயங்குவதால், அங்கு முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
27 ஆண்டுகள் அங்கு தலைமை தலைவராகப் பணியாற்றிய வெள்ளையன், தமது காலத்தில் செயல்படுத்தப்பட்ட வெளிப்படைத் தன்மை தற்போது அனுசரிக்கப் படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அந்த நிலையத்தின் மிருகங்களைப் பற்றிய விவரம், நிதி நிலைமை, வரவு, செலவு போன்ற விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு உரிமை இருப்பதால், அவ்விவரங்களை அதன் ஆண்டறிக்கையில் கு1970களில் மேற்கண்ட குறிப்புகள் அதன் ஆண்டறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தற்போது அது காணாமல் போயிருப்பதாகவும் உயிரியல் பூங்காவின் நிர்வாகம் அது பற்றி மௌனம் சாதிப்பதாகவும் எஃப் எம்டி குறிப்பிட்டுள்ளது.