தேசிய தடுப்பூசித் திட்டத்திற்கு கூடுதல் வெ.200 கோடி தேவை


தேசிய தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு கூடுதலாக 200 கோடி வெள்ளி தேவைப் படுவதாக தேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
2021ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப் பட்ட 300 கோடி வெள்ளி தடுப்பூசிகளைத் தருவிக்க மட்டுமே செலவிடப்பட்டதாக நேற்று இங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஆகையால் கூடுதல் 200 கோடி வெள்ளியை தேசிய அறநிதியில் (குவான்) இருந்து பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரு மான அவர் சொன்னார்.
இருப்பினும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் போன்ற தரப்பினர் வெ.300 கோடி மற்றும் வெ.500 கோடி தொகையினால் குழப்பமடை ந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
“இந்தத் தொகையை பயன்படுத்துவது நான். இந்தப் பணத்தைத் தருவது நிதியமை ச்சு” என அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சருமான கைரி தெரிவித்தார்.
இந்த புள்ளிவிவரம் குறித்து விரைவில் தாம் ஒரு தெளிவான விளக்கத்தைத் தரப்போவதாக அவர் சொன்னார்.
அவசரகால சட்டத்தை நிறைவேற்றி தேசிய அறநிதி யில் இருந்து தடுப்பூசிக்கான நிதியை அரசாங்கம் பயன் படுத்தும் முடிவிற்கு முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் உள்ள 83 விழுக்காடு மலேசியர்களுக்கு தடுப்பூசி செலுத்த 300 கோடி வெள்ளி போதுமானது என புத்ராஜெயா ஏற்கெனவே செய்துள்ள அறிவிப்பை பெக்கான் நாடாளு மன்ற உறுப்பினருமான நஜிப் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் அரசாங்கம், தனியார் துறை பள்ளிகளைச் சேர்ந்த 490,000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த துரிதப்படுத்தப்படும் என கைரி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =