தேசிய ஐக்கியத்தை தொடர்ந்து நிலைநாட்டுவோம்

பல இனங்கள் மற்றும் சமயங்களைக் கொண்ட மலேசியர்களிடையே இருந்து வரும் ஐக்கியம் மற்றும் நல்லெண்ணம் தொடர்ந்து நிலைநாட்டப்பட வேண்டும் என்று குவாந்தான் பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப் பள்ளி ஆசிரியரான குமாரி ஞானக்கன்னி கேட்டுக் கொண்டார். மலேசியா தொடர்ந்து நிலைத் தன்மையுடனும் ஒருமைப்பாட்டுடனும் திகழ்வதற்கு பல இன மக்களுடனான நல்லிணக்கமும் ஒற்றுமையும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு அவற்றை வலுப்படுத்துவது அவசிய மாகும் என குவாந்தான் வட்டாரத்தில் செயல்பட்டு வருகின்ற சேவை இயக்கத்தின் தலைவி மரியா அண்ணாமலை, அவ்வியக்கத்தின் துணைத் தலைவர் ஆர். விஜய் ரவி ஆகியோர் கூறினர். உலகில் எந்த நாட்டுக்கும் இல்லாத ஒரு பெருமை நம் மலேசியாவிற்கு உண்டு. மலாயர், சீனர், இந்தியர் என மூன்று இனங்களோடு மேலும் பல இனங்களும் பல மொழிகள் பேசும் கலை கலாசாரப் பின்னணியோடு இன மத ஒற்றுமை அமைதி சுபிட்சம் சகிப்புத்தன்மை வளப்பம் என உலகின் மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது நம் மலேசியா என்றால் அது மிகையாகாது என்று ஜொகூர் வட்டாரத்தைச் சேர்ந்த நந்தினி பத்துமலை, காயத்ரி ஆகியோர் கூறினார்கள். நாட்டிற்கும் மக்களுக்கும் மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் ஐக்கியமும் நல்லெண்ணமும் எல்லா காலங்களிலும் தொடர வேண்டும் நமது இளைய தலைமுறை நிறமும் இந்த பண்புகளை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் பொருத்தப்பட வேண்டும் என்று தமிழ் மலர் வாசகர்களான சசிதரனும் தியாகுவும் கேட்டுக் கொண்டனர். பள்ளி கல்லூரி என்று மற்ற இன மாணவர்களோடு ஒற்றுமையாக இருந்து இப்போது பணியிடங்களிலும் இந்த ஒற்றுமை பேணப்பட்டு வருவதாகவும் இளைய தலைமுறையினர் இனம் மதம் மொழி சமயம் என்ற பேதமற்ற தேசத்தை காண விரும்புகிறோம் என்று சசிதரன் கூறினர். நாட்டில் பொறுப்பற்ற சிலர் செய்யும் இனத்துவேச பிரச்சினைகளால் நாட்டில் எங்களின் எதிர்காலம் பாழ்பட்டு விடக்கூடாது என்றும் அனைத்து இனங்களுடன் ஒற்றுமையுடன் கூடிய புத்தம்புது பூமியாக மலேசியாவை காண விரும்புகிறோம் என்று தமிழ் மலர் வாசகர்களான நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + four =