
தேசிய ஃபைபரைசேஷன் மற்றும் இணைப்பு திட்டம் (NFCP) என்பது மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் முன்னேற் றத்திற்காக வலுவான, பரவலான, உயர்தர மற்றும் மலிவான டிஜிட்டல் இணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.
இத்திட்டம் மலேசியாவின் துணைப் பிரதமரால் 19 செப்டம்பர் 2019 நாளன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அகண்ட அலைவரிசையின் தரம் மற்றும் பாதுகாப்பு, அதன் விலையை குறைத்தல், அனை வருக்கும் இணைய அணுகலை எளிமை யாக்குதல் போன்ற வளர்ந்து வரும் அத்தியா வசியத் தேவைக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த NFCP உருவாக் கப்பட்டது. அது மட்டுமின்றி, NFCP திட்டம் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில், எதிர்கால தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வசதியான சூழலையும் ஏற்படுத்தும் என்பது உறுதி. NFCP – இன் ஒட்டுமொத்த செயல்படுத்தும் கால வரையரை ஐந்து (5) ஆண்டுகளாகும்;
அதாவது 2019ஆம் ஆண்டில் தொடங்கி 2023 ஆம் ஆண்டில் நிறைவடையும். NFCP பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. அதாவது, தேவையான ஒழுங்குமுறை கொள்கைகளும் மற்றும் கருவிகளையும் பயன்படுத்தி பல்வேறு மூலாதாரங்களில் இருந்து விவேகமான மற்றும் நிலையான முறையில் NFCP -க்கான நிதியை நிர்வகிக்கவும்; நாடு முழுவதும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை மேம்படுத்துதல்; சர்வதேச வலைப்பின்னலையை உள்நாட்டு வலைப்பின்னலுடன் இணைப்பது மற்றும் கல்வி, வேளாண்மை மற்றும் சுகாதார பாதுகாப்பு, சிறு நிறுவனங்கள் மற்றும் குறைவான பகுதிகள் போன்ற உயர் தாக்க சமூக மற்றும் பொருளாதார துறைகளில் இணைப்பை மேம்படுத்துதல் இதில் அடங்கும்.
மேலும், NFCP பல இலக்குகளையும் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் மொத்த தேசிய வருமானத்தின் 1 சதவீதத்தில் நுழைவு நிலையான அகண்ட அலைவரிசையின் தொகுப்பு ; 2020க்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்துறை பகுதிகளிலும், 2023க்குள் அனைத்து மாநில தலைநகரங்களில் உள்ள வளாகங்களுக்கு 100 ஜிகாபிட் சேவையைக் கிடைக்க செய்தல், 2021 க்குள் பொது போக்குவரத்து மையங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் தாக்கப் பகுதிகளுக்கு குறைந்தபட்ச வேகம் 500 எம்.பி.பி.எஸ் கிடைக்கச் செய்தல்; 2022 ஆம் ஆண்டில் துணை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 20 ஜிகாபிட் மற்றும் 500 Mbps வேகம் வரை கிடைக்கச் செய்தல்; 2022 க்குள் பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் தபால் நிலையங்களுக்கு 70 சதவீதம் வலைப்பின்னல்கள் ஏற்படுத்துதல் மற்றும் 2023 ஆம் ஆண்டில் 98 சதவீதம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 30Mbps வரை சராசரி வேகம் ஏற்படுத்தித் தருதல் ஆகியவை ஆகும்.
மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது.
தகவல் தொடர்பு உள் கட்டமைப்பின் கொள்கை ஒப்புதலை செயல்படுத்துதல், அதன் மேம்பாட்டுத் திட்டத்தின் செலவுகளைக் குறைக்க மாநில அரசாங்கத்தின் உதவியை நாடுவது மற்றும் சNFCP திட்டத்தின் இலக்குகளை அடைய அவற்றின் செலவு மற்றும் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதிலும் MCMC பல தடைகளைச் சந்தித்து, இன்று அதற்கான நிவர்த்திகளையும் கண்டறிந்துள்ளது.
NFCP திட்டத்தில் பல நன்மைகளும் உண்டு. இத்திட்டம் மக்களிடையே புதிய வணிகங்களை ஈர்க்கும். மேலும், நகர்ப்புற குடியேற்றத்தைக் குறைப்பதைத் தவிர, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். ஒரு விரிவான அகண்ட அலைவரிசை செயல்படுத்தப்படுவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஆக, நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அகண்ட அலைவரிசையின் பயன்பாடுகள் அவசியம். உலக வங்கி வெளியிட்ட 2016 ஆம் ஆண்டின் உலக மேம்பாட்டு அறிக்கையில் நிலையான அகண்ட அலைவரிசையின் ஊடுருவலில் 10 சதவீத புள்ளி அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 1.2 சதவீதமாகவும் வளரும் நாடுகளில் 1.38 சதவீதமாகவும் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.38 வளர்ச்சி RM 17.9 பில்லியன் (USD4.3 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய ஆஊஆஊ பல நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றது.
ஐந்தாவது அட்டவணை கீழ் பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்குதல், வருடாந்திர இடம்பெயர்வு திட்டத்தை தயாரித்து MCMC உடன் பகிர்ந்து கொள்ளுதல், இத்திட்டத்தின் தரவுத்தளத்தை விளம்பரப்படுத்துதல்,
தளங்களை அடையாளம் கண்டு தரவுத்தளத்தை மேம்படுத்தல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளை MCMC செயல்படுத்தி வருகின்றது