தேசியக்கொடி சர்ச்சையை இனப்பிரச்சினையாக்காதீர்

0

அண்மைய கூடைப்பந்து விளையாட்டின் போது தேசியக்கொடி தவறாக பறக்கவிடப்பட்ட சம்பவம் பற்றி இனவாதமாகப் பேசுவதை மலேசியர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா நினைவுறுத்தினார்.
இந்தத் தவற்றை தீவிரமாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆனால் இந்த விவகாரத்தை ஓர் இனப்பிரச்சினையாக்கக் கூடாது. அது ஒரு பொருத்தமான செயலும் அல்ல என அவர் தெரிவித்தார்.
மலேசியக்கொடியை தவறாகப் பறக்கவிடுவது ஒரு குற்றமாகும். இந்தக் குற்றம் விசாரிக்கப்பட வேண்டும். மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் இந்த விவகாரத்தை ஓர் இனப் பிரச்சினையாக்கக்கூடாது. அது முறையல்ல. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும் என்றார் அவர். இந்த விவகாரம் குறித்து ஒரு வழக்கறிஞர் மற்றும் பெர்லிஸ் முப்தி வெளியிட்ட அறிக்கை குறித்து அப்துல்லா கருத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here