தேங்காய் பற்றாக்குறையை கூற தென்னை மரத்தில் ஏறிய இலங்கை மந்திரி

இலங்கையில் மாநில மந்திரியாக இருப்பவர் அருந்திகா பெர்னாண்டோ.  நாட்டில் தேங்காய் விளைச்சல் அதிகமின்றி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்ற தகவலை மக்களிடம் கூற வேண்டும் என நினைத்து உள்ளார்.


இதற்கு இவர் மேற்கொண்ட வழிமுறை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அவர் தென்னை மரமொன்றில் ஏறியுள்ளார்.  அதில் இருந்தபடியே மக்களை நோக்கி பேசிய அவர், உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு மற்றும் உள்நாட்டு நுகர்வுக்கு தேவையான 70 கோடி தேங்காய்கள் நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது.

தென்னை மரங்களை வளர்ப்பதற்கு கிடைக்க கூடிய ஒவ்வொரு நில பகுதியையும் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  தேங்காய் தொழிற்சாலையை ஊக்கப்படுத்த வேண்டும்.  இதனால் நாட்டின் அந்நிய செலாவணி உயரும்.

தேங்காய் விலை விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில், நாட்டில் தேங்காய் பற்றாக்குறையை முன்னிட்டு அதன் விலையை குறைக்க அரசு யோசித்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.  எனினும் அவரை மரத்தில் இருந்து இறங்க செய்ய அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டமே நடத்தியுள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − nine =