தெலுக் இந்தான் பெரிய சந்தையில் பூமாலை விற்பனை கடுமையாக பாதிப்பு

0

கடந்த ஒரு மாத காலமாக இங்குள்ள பெரிய சந்தையில் பூமாலை விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கடந்த 20 ஆண்டுகளாக பூமாலை கடையை நடத்திவரும் பி.எஸ்.வீரப்பா குடும்பத்தினர் தமிழ் மலரிடம் தெரிவித்துள்ளனர்.
பூமாலை வணிகம் என்பது மங்கலகரமான கோயில் திருவிழா, திருமண வைபவங்களை அடிப்படையாகக் கொண்டது. நாளொன்றுக்கு சுமார் வெ.1,000 வரை வியாபாரம் நடைபெற்று வந்தது. இன்றைய சூழலில் பொது நிகழ்ச்சி போன்றவற்றுக்கு தடை விதித்துள்ளதால் 30 விழுக்காடுகூட வணிகம் நடத்த முடியாமல் வருமானத்தை இழந்துள்ளோம் என்றும் குறிப்பிட்டனர். இந்நிலையில் வரும் 14.4.2020இல் சித்திரைப் புத்தாண்டு தினத்திலும், 4.5.2020 விமரிசையாக கொண்டாடப்படவிருந்த பேரா நகரத்தார்களின் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் சித்திரா பௌர்ணமி நடைபெறாததும் எங்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான். மேலும், இந்நிலை நீடித்தால் பூக்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பூ வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என பி.எஸ்.வீரப்பா தன் மன வேதனையை வெளிப்படுத்தினார்.
மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனோ நச்சுத் தொற்றினை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறி உள்ளார். கொரோனோ மறைவுக்குப் பின்னரே மக்கள், வியாபாரிகள் அனைவருக்கும் விடிவெள்ளி தோன்றும் என குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =