தெப்ராவ் தமிழ்ப்பள்ளியில் தேசிய தினக் கொண்டாட்டம்

0

கடந்த ஆகஸ்ட் 30 தெப்ராவ் தமிழ்ப்பள்ளியில் தேசிய தின விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மலேசிய திருநாட்டின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைக்கும் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தன. முன்னதாக உரையாற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் ம. குணசேகரன், இன்று அமைதிப்பூங்காவாகத் திகழும் மலேசிய திருநாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்டவர்களையும் அவர்கள் செய்த தியாகங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் மலேசியர்களின் ஒற்றுமையுணர்வை மேலோங்கச்செய்வதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.
இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி. செல்வராணி இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். அவர் தமதுரையில் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு முன்னுரிமை எனும் நிலையில் சிறப்பாக செயல்படுவதாகப் பாராட்டுத்தெரிவித்தார். மலேசியக் கொடியின் வண்ணமயமாய் பள்ளி ஜொலித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 10 =