தெப்பத் திருவிழாவில் கலந்து கொண்ட 30,000 பேரில் யாருக்கும் கோவிட்-19 தாக்கம் இல்லை

0

கடந்த மார்ச் 8ஆம் தேதி தெலுக் பகாங்கில் நடந்த தெப்பத் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கோவிட் – 19 வைரஸ் தொற்றவில்லை என பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் கூறினார்.சுமார் 30,000 இந்துக்கள் கலந்து கொண்ட இத் திருவிழாவில், இதுவரை யாருக்கும் கோவிட்-19 வைரஸ் தாக்கம் கண்டதாக மாநில சுகாதார இலாகா புகார் தரவில்லை என்றார் அவர்.
ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தில் நடந்த இத்தெப்பத் திருவிழாவில் சுமார் 30,000 பக்தர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலரிடையே கோவிட்-19 தாக்கம் குறித்து அச்சம் ஏற்பட்டது.
காரணம் கடந்த மாத இறுதியில் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங்கில் நடந்த தப்ளிக் ஒன்றுகூடலில் கலந்து கொண்ட பலருக்கு கோவிட்-19 தாக்கம் கண்டுள்ளது. இந்த ஒன்றுகூடலில் சுமார் 16,000 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் சுமார் 4,000 பேரை அரசாங்கம் இன்னும் அடையாளம் காணவில்லை. இவர்களை கோவிட்-19 சோதனைக்கு முன்வரும்படி அரசாங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 3 =