தென்மேற்கு மாவட்ட காவல் துறை அதிரடியில் கெத்தும் நீர் விற்பனை கும்பல் முறியடிப்பு

0

நேப்பாள் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த கெத்தும் தயாரிப்புக் கூடம் ஒன்றை தென்மேற்கு மாவட்ட காவல் துறையினர் கடந்த சனிக்கிழமை அதிகாலை மணியளவில் பெர்மாத்தாங் டாமார் லாவுட்,பத்து மாவுங் பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் முறியடித்ததாக தென்மேற்கு மாவட்ட காவல் துறை தலைவர் அ.அன்பழகன் நேற்று மாவட்ட காவல் துறையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இந்த அதிரடி சோதனையில் 3 உள் நாட்டைச் சேர்ந்த ஆடவர்கள் மற்றும் நேப்பாளி ஒருவரை காவல் துறை அதிகாரிகள் கைது செய்ததாக கூறினார்.
காவல் துறையினர் மேற் கொண்ட விசாரணையில்,நேப்பாள ஆடவர் ஒருவரை நாள் சம்பளம் ரிம. 50 கொடுத்து கெத்தும் நீர் தயாரிப்புக் கூடத்தை பாதுகாக்க பணியில் அமர்த்தப்பட்டுள்ளதை கண்டறியப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.
இதனிடையே காவல் துறையினர் 1000 பேக்கெட் பதப்படுத்தப்பட்ட கெத்தும் நீர், 80 கிலோ கிராம் கெத்தும் இலைகள் மொத்த சந்தை விலை ரிம 7,000 மதிப்பை கொண்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அ.அன்பழகன் தெரிவித்தார்.
பதப்படுத்தப்பட்ட கெத்தும் நீரானது பத்து மாவுங் மற்றும் பாயான் லெப்பாஸ் பகுதிகளில் ரிம 5 முதல் 10 வெள்ளிக்கு விற்கப்படுவதாக அவர் சொன்னார்.
கடந்த மூன்று மாதக் காலமாக கெத்தும் நீர் விற்பனையை அக்கும்பல் தீவிரமாக செய்து வந்துள்ளதை காவல் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ள வேளையில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய ஆடவர் ஒருவருக்கு காவல் துறையில் 3 குற்றச் செயல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதை காவல் துறை பதிவேட்டில் கண்டறியப்பட்டுள்ளதையும் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here