தென்னமரத் தோட்ட ஊழல் விசாரணையில் சிலாங்கூர் அரசு ஒத்துழைப்பு வழங்கும்

தஞ்சோங் காராங்கில் உள்ள தென்னமரத் தோட்டத்தில் இரு தனியார் நிறுவனங்களுக்கு நிலக் குத்தகை வழங்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் ஒத்துழைப்பு வழங்க சிலாங்கூர் அரசாங்கம் தயாராக உள்ளது. கடந்த புதன்கிழமை அத்தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 குடியேற்றக்காரர் கள் எழுப்பியுள்ள குற்றச் சாட்டில் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளர் ஜுவைரியா ஸுல்கிப்ளி கூறினார். மாநில அரசாங்கத்தின் பொறுப்புடைமை, வெளிப்படைத் தன்மை கொள்கைக்கேற்ப இந்த விவகாரத்தில் ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் இருக்குமானால், தாங்கள் ஒருபோதும் சமரசமாகப் போக மாட்டோம் என அவர் தெளிவுபடுத்தினார். ஆகையால் இந்த விவகாரத்தில் போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் மாநில அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என அவர் சொன்னார். தென்னமரத் தோட்ட விவகாரத்தில் தவறு புரிந்தவர்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு வழங்கப்படாது என அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சிலாங்கூர் நிலம் மற்றும் கனிம வள அலுவலகமும் விசாரணை நடத்தி வருவதாக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பின ருமான அவர் சொன்னார். கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தென்னமரத் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 குடியேற்றக் காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 1 =