தென்னமரத் தோட்ட இந்திய விவசாயிகளுக்கு நல்ல தீர்வு; மந்திரி பெசார் அறிவிப்பு

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்துள்ள தென்னமரத் தோட்டத்தின் தஞ்சோங் பாசீர் நில குத்தகை விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதோடு அதற்கு தீர்வும் காண ப்பட்டு அத்திட்டம் முற்றாக ரத்து செய்ய ப் பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார். தஞ்சோங் பாசீர் லாடாங் தென்னமரம் பெஸ்தாரி ஜெயா கோலசிலாங்கூரில் இரண்டு நிறுவனங்களுக்கு 39 ஹெக்டர் நிலம் குத்தகைக்கு விடப் பட்ட தை சிலாங்கூர் மாநில அரசு ரத்து செய்துள்ளதோடு இந்திய விவசாயிகளுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். கடந்த 17.11.2021 ல் இந்த விவகாரம் மாநில பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ப் பட்டு ஆட் சிக் குழுக் கூட்டத்தில் விவாதிக்க ப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்க ப் பட்டதாக அவர் தெரிவித்தார். அந்த நிலம் இதற்கு முன்பு ஷரிக்காட் ஃபைசான் சூரியா சென்டிரியான் பெர்ஹாட்டிற்கும் ஷரிக்காட் திரில்லியன் புரோஜெக்ட் சென்டிரியான் பெர்ஹாட்டிற்கும் குத்தகைக்கு விடப் பட்டிருந்தது. ஆயினும் அந்த இரு நிறுவனங்களுக்கு வேறு ஒரு இடத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு க்கு நிலம் குத்தகை அடிப்படையில் வழங்கப் படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார். தஞ்சோங் பாசீர் தென்னமரம் பகுதியில் நிலம் குத்தகை க்கு விடப் பட்டிருந்த விவகாரம் கடந்த ஏப்ரல் 2021 ல் தமது கவனத்திற்கு கொண்டு வர ப் பட்டதாகக் கூறினார். இந்த நிலம் குத்தகை க்கு விடப் பட்டிருந்த வேளையில் மாநில அரசு இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்று இந்திய விவசாயிகள் தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். மாநில அரசு ம் உடனடி நடவடிக்கை யில் இறங்கி இதற்கு நிரந்தர த் தீர்வு கண்டுள்ளதாக ஆட்சிக் குழுவினர் அவரது சிறப்பு அதிகாரி டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் களுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி யில் இந்த இனிப்பான தகவலை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார். இதன் வழி தென்னமரத் தோட்டத்தின் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டதோடு அதற்கான நல்ல தீர்வும் இவர்களுக்கு க் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். இதற்கிடையே இந்த த் தோட்ட விவசாயிகளின் பிரதிநிதி யாக இருந்து வரும் வி.ஜெயகுமார் மற்றும் தோட்ட த் தொழிலாளர்கள் தமிழ் மலர் வாயிலாக மந்திரி பெசாருக்கு தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − twelve =