தென்கொரியாவில் கர்ப்பகால சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கரு கலைப்பு

0

சியோல்:

தென்கொரியா தலைநகர் சியோலில் வசித்து வரும் வியட்நாமை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் கர்ப்பமானார். அண்மையில் இவர் தனது உடல் மிகவும் சோர்வானதால் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் கர்ப்பகால சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அதே மருத்துவமனையில் சியோலை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வயிற்றில் உள்ள கருசிதைந்து விட்டதால் அதனை அகற்றுவதற்காக வந்திருந்தார்.

அப்போது மருத்துவமனையில் இருந்த நர்சு இரு நோயாளிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கவனிக்காததால், வியட்நாம் பெண்ணுக்கு ஊட்டச்சத்து ஊசிக்கு பதிலாக மயக்க ஊசியை செலுத்திவிட்டார். அதன் பின்னர் வந்த டாக்டரும் நோயாளிகளின் பெயர் விவரங்களை அறிந்துகொள்ளாமல் மயக்கத்தில் இருந்த வியட்நாம் பெண்ணுக்கு கருக்கலைப்பு அறுவை சிகிச்சையை செய்தார்.

அதே சமயம் வியட்நாம் பெண் தனது கரு கலைக்கப்பட்டது என்பதை அறியாமலேயே வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் இடுப்பு பகுதியில் கடுமையான வலி மற்றும் ரத்த கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து மற்றொரு டாக்டரிடம் பரிசோதனைக்கு சென்றபோதுதான் அவரது கரு கலைக்கப்பட்டது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் சமந்தப்பட்ட டாக்டர் மற்றும் நர்ஸ் மீது போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இருவரும் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + seven =