தென்காசி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு சம்பவம்: காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு

0

தென்காசியில் போலீசார் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் இறந்ததாகக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement

image

தென்காசி மாவட்டம் விகே புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் என்பவர் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் விசாரிக்க அழைத்து சென்று அடித்ததால்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள், வீரகேரளம்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement

Advertisement

image

உயிரிழந்த ஓட்டுநர் குமரேசனின் தந்தையான நவனீத கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில் காவலர் மற்றும் எஸ்.ஐ என இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =