தெங்கு அட்னானின் சொத்து மதிப்பு வெ.90 கோடி!

0

தமக்கு 80லிருந்து 90 கோடி ரிங்கிட் சொத்து இருப்பது உயர்நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட பின்னர், கூட்டரசுப் பிரதேச முன்னாள் அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் நீதிமன்றத்தில் ஆத்திரத்தில் பிதற்றத் தொடங்கினார். தமது சொத்துகளை பொதுவில் அறிவித்த பின்னர் பொதுமக்கள் தம்மீது தவறான அபிப்பிராயம் கொள்ள வகை செய்யும் என்பதோடு தமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்றும் அவர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.ஒரு தொழிலதிபரான டான்ஸ்ரீ சாய் கின் கோங்கிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட்டை பெற்றுத் தமது நிறுவனமான தாட்மான்சோரி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்து.மேலும், மாநகர் குத்தகைகளைப் பெற்று வந்த சாய் கின் கோங்கிடமிருந்து அவர் பெற்ற பணமானது கையூட்டு என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கில் தமது சொத்துகளை ரகசியமாக வெளியிட வேண்டுமென்ற அவரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. அதனையடுத்து நீதிமன்றத்தில் அவரின் சொத்துகள் மற்றும் குடும்பத்தாரின் சொத்துகள் அறிவிக்கப்பட்டன. 2001ஆம் ஆண்டு அவர் அமைச்சரவையில் சேர்ந்தபோது 93.8 கோடி ரிங்கிட் சொத்தும், 2006ஆம் ஆண்டில் 71.1 கோடி ரிங்கிட்டும், 2013ஆம் ஆண்டில் அவருக்கு 69.1 கோடி சொத்தும், 2016ஆம் ஆண்டில் அவருக்கு 78.2 கோடி ரிங்கிட் சொத்தும் இருந்ததாகவும் அவற்றின் பட்டியலை பிரதமருக்குத் தெரிவித்து விட்டதாகவும் தெங்கு அட்னான் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். தாம் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே போதுமான சொத்துகளைக் கொண்டிருந்ததால், பதவியில் இருந்த போது ஊழல் செய்து சொத்துகளைச் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லையென அவர் குறிப்பிட்டார். சாய் கின் கோங்கிடமிருந்து தாம் பெற்ற 2 மில்லியன் ரிங்கிட்டானது அரசியல் நிதி என்றும் அந்தப் பணம் சுங்கை பெசார் மற்றும் கோல கங்சாரில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் செலவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =