தெக்குன் நேஷனல் கோவிட்-19 வணிக மீட்பு நிதித் திட்டத்திற்காக 7,681 விண்ணப்பங்களை பெற்றுள்ளது

தெக்குன் நேஷனல் நிறுவனம் இதுவரை கோவிட்-19 வர்த்தக மீட்பு நிதி திட்டத்திற்காக (ஊக்ஷசுஆ) 7,681 விண்ணப்பங்களை தொழில்முனைவோரிடமிருந்து பெற்றுள்ளது. குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதில் விண்ணப்பித்துள்ளனர்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜஃபார் கூறுகையில், ஆரம்பத்தில் கூகுள் படிவத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மின்னஞ்சல் மூலமாகவும் கடன்களுக்கான விண்ணப்பத்தை நிறுவனம் எளிதாக்கியுள்ளது.
நேற்று முதல், ஒரு ஆன்லைன் விண்ணப்ப முறையும் உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் தொழில்முனைவோர் hவவயீ://கயள.வநமரn.படிஎ.அல/உசெஅ/ இல் ஒரு படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கோவிட்-19 பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான கட்டுப்பாட்டு நிபந்தனைகளின் குற்றச்சாட்டுகளுக்கும் வான் ஜுனைடி இதன் மூலம் பதிலளிக்கத் தயாராகவுள்ளார்.
அண்மையில், பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிஹாத்தின் தூண்டுதல் தொகுப்பின் கீழ் மைக்ரோ நிறுவனங்களுக்கு ரிம200 மில்லியனை தெக்குன் நேஷனல் வழங்கியுள்ளது.
 இந்த ஊக்கத்தொகைக்காக ஒரு வணிகர்களும் குறைந்தபட்ச ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று வான் ஜுனைடி கூறினார்.
மேல் தகவலுக்கு, விண்ணப்பதாரர்கள் றறற.வநமரn.படிஎ.அல எனும் தெக்குன் நேஷனலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது 03-9059 8888 ஐ அழைக்கலாம்.
“எல்லா தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை நான் வரவேற்கிறேன்.
“எங்கள் மைக்ரோ தொழில்முனைவோரின் சுமையை எளிதாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்தவும் தெக்குன் நேஷனல் உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று வான் ஜுனைடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =