தூய்மையான உணவகங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அண்மையில் தூய்மையான உணவகங்கள், மக்கள் பயன்படுத் தக்கூடிய வகையில் சுத்தமான கழிப்பறை, உணவகத்தின் தூய் மைப் பராமரிப்பு ஆகியவற்றைத் தேர்வு செய்து நற்சான்றிதழ் – விருது வழங்கும் நிகழ்வு பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சேவை இலாகா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், 50க்கும் மேற்பட்ட இந்திய, மலாய், சீன உணவகங்களுக்கு நற்சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டன.
இதற்குச் சிறப்பு வருகையாக டத்தோ பண்டார் முகமட் சைபுடின் கலந்து கொண்டு நற் சான்றிதழ்களையும் விருதையும் எடுத்து வழங்கினார்.
வாழையிலை உணவகம், கண்ணா கறி ஹவுஸ் நிர்வாகி யோகேஸ் நற்சான்றிதழைப் பெற்றுக்
கொண்டார். பெட்டாலிங் ஜெயா ஸ்ரீபாண்டி உணவகத்தின் சார்பாக
அதன் உரிமையாளர் சீனு தம்பதியர் நற்சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =