தூய்மையான அமைச்சரவை மக்களின் நம்பிக்கையைப் பெறும்!

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஒரு தூய்மையான அமைச்சரவையை அமைப்பதன் மூலம்தான் புதிய அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என புத்ரா பல்கலைக்கழக விரிவுரையாளரான இணைப் பேராசிரியர் முகமட் மஹாடி இஸ்மாயில் கூறினார். அரசாங்க நிர்வாகங்கள் சுமுகமாகச் செயல்படுவதை உறுதி செய்ய தமது அமைச்சரவை உறுப்பினர்களை நியமனம் செய்வதில் பிரதமர் தாமதம் செய்யக்கூடாது என்றார் அவர். .

மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களும் ஆற்றல் மிக்கவர்களும் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெறச் செய்வதை பெர்சத்துத் தலைவர் உறுதி செய்ய வேண்டும் என அவர் சொன்னார். கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதற்கு தூய்மையான அமைச்சரவை மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார். ஊழலற்றவர்களைத்தான் அமைச்சரவையில் இடம்பெறச் செய்யப்போவதாக 8ஆவது பிரதமராகப் பதவியேற்ற பிறகு தாம் ஆற்றிய உரையில் முஹிடின் அளித்துள்ள இந்த உறுதிமொழி வரவேற்கத் தக்கது என அவர் சொன்னார்.

நாட்டின் பொருளாதாரம், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, ஊழலை எதிர்த்துப் போராடுவது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து பிரதமர் விரிவாக தமது முதலாவது உரையில் வலியுறுத்தியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற முக்கிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுவதைத்தான் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாக மஹாடி தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − three =