தூய்மைக் கேட்டில் சிம்பாங் அம்பாட் பெரிய சந்தை

0

சிம்பாங் அம்பாட் சிற்றூரில் அமைந்துள்ள பெரிய சந்தை தூய்மையின்றி காணப்படுகிறது. இந்த சந்தை இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஊத்தான் மெலிந்தாங் பெர்ணம் நதிக்கரையில் இடமாற்றம் செய்யப்படும் என்று கூறிவந்த தெலுக் இந்தான் நகராண்மைக் கழகத்தின் அந்த மேம்பாட்டுத் திட்டம் கடந்த 30 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்து வருகிறது என்று புறநகர் தலைவர் ஞானசேகரன் சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இச்சந்தையில் நிலவி வந்துள்ள கால்வாய்கள், கூரைகள், கழிப்பறை, ஆங்காங்கே கைவிடப்பட்ட நிலையில் உள்ள தண்ணீர் சேமிக்கும் கல்வெட்டுகள், காலிப் பெட்டிகள் போன்று தூய்மைக்கேடு பிரச்சினைகளால் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியில் இந்த சந்தை முதலிடம் வகிக்கிறது என்றும் இதனை சுகாதார அமைச்சகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஞானசேகரன் கேட்டுக் கொண்டார். இந்த தூய்மைக்கேட்டுப் பிரச்சினைகள் காரணமாக பயனீட்டாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துவிட்டதால், இங்குள்ள வியாபாரிகளின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, தெலுக் இந்தான் நகராண்மைக் கழகம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 16 =