தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய இரு வங்காள தேசிகள்

0

நேற்று முன்தினம் ஜோர்ஜ்டவுன் உயர் நீதிமன்றத்தில் கொலை குற்ற வழக்கில் தூக்குத்
தண்டனையை எதிர் நோக்கிய இரு வங்காள தேச ஆடவர்கள் அத்தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என நீதிபதி டத்தோ அக்தார் தாஹிர் தீர்ப்பு கூறினார்.
முகமட் டோலார் மற்றும் பாருன் இருவரும் கடந்த 13.6.2016 ஆம் நாள் பிளோக் 19 மாஜிஸ்ட் ஹைட் திங்காட் பாயா தெருபோங் ஆயர் ஹீத்தாமில் இரவு 11.00 மணிக்கு முகமட் இஸாக் கோபிர் அகமட்டை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகினர்.
இவ்வழக்கு நீதிமன்ற வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. நேற்று முன்தினம் அவர்களின் வழக்கு விசாரணை இறுதிக் கட்ட விசாரணைக்கு வந்தது
அதில் அவ்வழக்குக்கு தேவையான சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லாத பட்சத்தில் அவ்விருவரும் குற்றவாளிகள் தான் என நிரூபிக்கத் தவறியுள்ளனர்.
மேலும் கொலையுண்ட ஆடவருக்கு அண்ணன் இருக்கிறார் என முதல் விசாரணையில் கூறப்பட்டது. ஆனால் அவ்வாடவர் சடலத்தைக் அடையாளம் காணவும் வரவில்லை விசாரணைக்கும் வரவில்லை.இவ்வழக்கில் சுமார் 14 சாட்சிகள் சாட்சியமளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + three =