துன் ஹுசேன் வழிமுறையை முஹிடின் பின்பற்றக்கூடாதா?

0

மார்ச் 9ஆம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மே 18ஆம் தேதிக்கு பிரதமர் முஹிடின் யாசின் ஒத்தி வைத்திருப்பது ஏன் என ஜசெகவின் மூத்த உறுப்பினர் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.
குறிப்பிட்ட தேதியில் அவை கூட்டப்பட்டால், போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் தமது பலத்தை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும் என முஹிடின் அச்சப்படுகிறாரா என அவர் வினா எழுப்பினார்.
இதனிடையே, ஆதரவாளர் களின் எண்ணிக்கையைக் கூட்டும் குதிரை பேரமும் நடக்க வாடீநுப்பிருக்கும் அச்சத்தையும் அவர் வெளியிட்டார்.
முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் காலமானதை ஒட்டி, பதவிக்கு வந்த துன் ஹுசேன் ஓன், 11 நாள்களுக்குப் பின்னர், 1976ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டி தமது பெரும்பான்மை பலத்தை நிரூபித்து ஆட்சியைத் தொடங்கினார்.
அதனைச் சுட்டிக்காட்டிய கிட் சியாங், அம்மாதிரியான நடைமுறையைப் பின்பற்றி முஹிடின் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென அவர் சவால் விடுத்தார்.
நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் தாமதமானால் அது புதிய அரசின் பலவீனத்தைக் காட்டும் என்றும் முஹிடின் ஒரு சட்டப்பூர்வமற்ற பிரதமர் எனக் குறிப்பிடப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நோன்பு மாதம் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்குகிறது. நோன்பு மாதத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது நாட்டில் எப்போதுமே நடந்திராத செயல் என வர்ணித்த அவர், கூட்டத்தை நோன்பு மாதம் தொடங்குவதற்கு முன் கூட்டினால் பாதகம் எதுவும் உண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 14 =