துன் சாமிவேலுவின் மனநிலையைப் பரிசோதிக்கலாம்

0

டத்தோஸ்ரீ சா.வேள்பாரியின் கோரிக்கைக்கு இணங்க, துன் சாமிவேலுவின் மனநிலை யைச் சோதிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
2001ஆம் ஆண்டு சுகாதாரச் சட்டம், பிரிவு 52இன் கீழ், நீதிபதி வோங் சீ லின் அத்தீர்ப்பை வழங்கியதாக வேள்பாரியின் வழக்கறிஞர் டேவிட் மேத்தியூஸ் தெரிவித்தார். சாமிவேலுவின் சார்பில் அவரின் வழக்கறிஞர் பிரேம் ராமசந்திரன் ஆஜரானார்.
அந்த விசாரணையின்போது, தம்மையும் ஒரு கட்சிக்காரராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று, சாமிவேலுவின் மனைவி என்று கூறிக் கொள்ளும் மிரியம் ரோசலின் எட்வர்ட் போல்(59) என்பவரின் மனுவை 5,000 வெள்ளி செலவுத் தொகையோடு நீதிபதி நிராகரித்தார்.
83 வயதாகும் தமது தந்தையார் சாமிவேலுவுக்கு மனச் சிதைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் நிதி மற்றும் சொத்து விவகாரங்கள் உட்பட சொந்த நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதால், அவரின் மனநிலையைப் பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமென்று வேள்பாரி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
சாமிவேலுவுக்கு சுயமாகத் தமது நிதி விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள முடியாது என்று மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டால், அவரின் சொத்துகளை நிர்வகிக்க தம்மோடு வழக்கறிஞர் விஜயகுமார் உட்பட சில முக்கியஸ்தர்களை நீதிமன்றம் நியமிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டதோடு, அவர்களுக்கான நிதியையும் நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + seven =