துணை சபாநாயகர் திருக்குரானை மதிக்கவில்லை என்று கூறப்படுவதை மலாக்கா முதலமைச்சர் நிராகரித்தார்

0

செவ்வாய்க்கிழமை தேசிய முன்னணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இட்ரிஸ் ஹாருணைத் தொடர்ந்து பேசுவதிலிருந்து தடைசெய்த துணை சபாநாயகர் வேங் பின் போர்ட்டை மலாக்கா முதல்வர் அட்லி ஸாகாரி தற்காத்துப் பேசினார். அதற்குமுன் தாம் குரானிலிருந்து மேற்கோள் காட்டி பேசுவதற்கு துணை சபாநாயகர் தமக்கு அனுமதியளிக்க வில்லை என்று இட்ரிஸ் கூறியிருந்தார்.
ஒதுக்கப்பட்ட நேரத்தை மீறி பேசிய இட்ரிஸ்ஸை துணை சபாநாயகர் நிறுத்த சொன்னது சரியான நடவடிக்கை என்று முதலமைச்சர் அட்லி நேற்று கூறினார். பேச்சை நிறுத்துமாறு இட்ரிசை பலமுறை கேட்டுக் கொண்டதின் காரணமாக இட்டிரிஸ் குரானிலிருந்து மேற்கோள் காட்ட முடியாமல் போனது. இதனால் துணை சபாநாயகரான வோங் குரானை மதிக்கவில்லை என்று இணைய வலைத்தளைங்களில் குற்றம் சாட்டப்பட்டது.
இட்ரிஸ் மலாக்காவின் முன்னாள் முதலமைச்சாரவர். இட்டிரிஸ் தமது பேச்சை குரானிலிருந்து மேற்கோள் காட்டி முடிக்க நினைத்தார். எனினும் ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டபடியால் துணை சபாநாயகர் இட்ரிசை தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை.
அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து இட்ரிஸ் குரானிலிருந்து மேற்கோள் காட்டி தமது பேச்சை முடிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டார்.
இதற்கிடையே துணை சபா நாயகர் குரானை மதிக்க வில்லை என்னும் கூற்றை மலாக்கா முதலமைச்சர் நேற்று நிராகரித்தார்.
தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தமது பேச்சை முடித்திருக்க வேண்டும். அவருக்கு 13 நிமிடம் ஒதுக்கப்பட்டது. இது மற்றவர்களுக்கு அளிக்கப்பட்டதைவிட மூன்று நிமிடம் அதிகமாகும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + five =