துங்கு அப்துல் ரஹ்மான் உயர்கல்விக் கூடத்திற்கு நிதியைக் குறைத்ததால் சீன வாக்காளர்கள் தேமுவுக்கு வாக்களித்தனர்

0

மசீசவிற்குச் சொந்தமான துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி – பல்கலைக்கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யத் தவறியதால்தான் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சோங் பியாய் நாடாளுமன்றாட தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் படுதோல்வி அடைந்ததாக முன்னாள் தேமு தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அஸிஸ் கூறினார்.
நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் வரை சீன வாக்குகள் தேமுவுக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் சுற்றுல்லாத்துறை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை பக்காத்தான் ஹராப்பான் நிறைவேற்றத் தவறியதால் தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் மனம் மாறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டில் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி – பல்கலைக்கழகத்திற்கு 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தொகை 10 லட்சம் வெள்ளியாக குறைந்துவிட்டது. இது நியாயமா என பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.எங்களின் தேமு ஆட்சியின்போது சீன மாணவர்களின் கல்விக்கு 35 மில்லியன் வெள்ளியை நாங்கள் வழங்கினோம் என நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நஸ்ரின் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி – பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டை மசீச கைவிட வேண்டும். அப்படி கைவிட்டால்தான் அந்த உயர்கல்வி நிலையத்திற்கு நிதி வழங்குவோம் என பக்காத்தான் ஹராப்பான் கூறுவது கல்வியை அரசியலாக்குவதாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாகவே தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்க சீனர்கள் தவறிவிட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here