தீரன் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

0

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அலுவலக உதவியாளரான எஸ்.தீரன் மீதான வழக்கு நேற்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.குற்ற விசாரணை முறை சட்டத்தின் 177ஹ பிரிவின் கீழ் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்வி தமது தீர்ப்பில் கூறினார்.அதோடு தீரனுக்கான ஜாமீன் விண்ணப்பத்தை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.தீரனுக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதால், அவர் அங்கு ஜாமீன் மனுவுக்கு விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =