தீப் பற்றிய வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு குத்தி கொலை செய்யப்பட்ட சடலங்கள் மீட்பு

0

நீலாய், ஜூலை 26-
நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் தாமான் டேசா மெலாத்தி நீலாய் வீடொன்று தீப் பிடித்து எரிகிறது என்று நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தீ அணைக்கப் பட்ட பின்னர் அவ்வீட்டிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டது என்று நீலாய் வட்டார சூப்ரிண்டன் முகமட் நூர் மர்சூக்கி பெசார் தெரிவித்தார்.
தீப் பற்றி எரிந்து கொண்டிருந்த அவ்வீட்டின் தீ அணைக்கப்பட்ட பின்னர் சமையலறையில் ஆடவர் ஒருவரின் சடலமும் கிடங்கு அருகில் பெண்ணின் சடலமும் மீட்கப் பட்டுள்ளது என்று மீட்புப் படை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மீட்கப்பட்ட அச்சடலங்கள் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது.
கொலையுண்ட ஆடவர் டான் கிம் ஜூ (வயது 73) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னாள் பொறியியலாரான இவர் பந்திங் சிலாங்கூரில் வேலை செய்து வந்துள்ளார்.
கொலையுண்ட 64 வயதுடைய எங் சோங் ஹூவா என்ற மூதாட்டி டானின் மனைவி என்றும் அவரும் ஒரு முன்னாள் ஆசிரியை என்றும் போலீஸ் உறுதிப் படுத்தியுள்ளது.
இத்தம்பதியர் அவ்வீட்டில் கடந்த 10 வருடங்களாக வசித்து வந்துள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தம்பதியர் கழுத்தறுக்கப்பட்டு குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கொலைக்குப் பின்னர் வீட்டின் சமையலறையில் தீ ஏற்படுத்தி விட்டு மாயமாகியுள்ளனர் அக்கொலையை செய்தவர்கள்.
கொலையாளியுடன் போராடிய காரணத்தால் ஆடவரின் கை கால்களில் ரத்தக் காயங்களும் காணப்பட்டுள்ளது என்றும் சூப்ரிண்டன் மர்சூக்கி தெரிவித்தார்.
கொலைக்காகன காரணங்கள் இன்னும் கண்டறியாத பட்சத்தில் அவ்வீட்டின் தீப் பற்றியும் அதிலிருந்து மீட்கப்பட்ட கொலையுண்ட சடலங்கள் குறித்தும் விசராணையை போலீஸ் மேற்கொள்ளும் என்றும் சூப்ரிண்டன் மர்சூக்கி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + twelve =