தீபாவளியை குதூகலமாக்க ஈப்போ “வீ.கி.கல்யாணசுந்தரத்திற்கு” வருகையளியுங்கள்

ஈப்போ மாநகரில் அன்றும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்திய பாரம்பரிய ஆடைகளின் உலகம் என்றால் அது வீ.கி.கல்யாணசுந்தரம் அண்ட் சன்ஸ் சென்.பெர்ஹாட் தான். அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி கோவிட் 19 ஆல் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், புத்தாடை என்பது நமது தீபத்திருநாள் பாரம்பரியமே. இந்த திருநாளை மேலும் குதூகலமாக்க எங்கள் கடைக்கு வருகையளித்து புதிய ரக டிசைன் ஆடைகளை வாங்கிக் கொள்ளுங்கள் என அதன் இயக்குனர், கலா பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
நியாயமான விலையில் தரத்திற்கேற்ப இங்கு ஆடைகள் விற்கப்படுகின்றன. குறிப்பாக பெண்கள் அணியும் புடவைகள் பல டிசைன்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. காட்டன் சில்க் ஷாப்ட் சில்க், விசிறி மடி, பூட்டிக் புடவை என பல ரகப் புடவைகள் வாடிக் கையாளர்களுக்காக இங்கு விற்கப்படுகின்றன. 60 வெள்ளி முதல் மக்கள் வாங்க கூடிய அளவிற்கு புடவை விலையும் இருக்கும்.
அதிலும், ஆண் களுக்கான வேட்டி, ஜிப்பா, குழந்தைகளுக்கான ஆடைகளும் பல டிசைன்களில் இங்கு கிடைக்கும். கோவிட் 19 தொற்றின் பொருட்டு எங்கள் கடைகளில் மட்டுமல்ல இங்குள்ள லிட்டில் இந்தியா வியாபாரிகள் மிகவும் கவனமாகவே விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் முக கவசம் இல்லாமல் உள்ளே வரக்கூடாது. மேலும், அவர்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டு,உடல் வெப்பமும் பரிசோதிக்கப் படுகின்றன. எனினும், வார இறுதியில் சனி, ஞாயிறு மட்டுமே ஷாப்பிங் வரும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது. அதை கொஞ்சம் தவிர்த்தால், நாம் இன்னும் பாதுகாப்பாக இருக்கலாம்.
அதாவது, வேலை நாட்களில் வேலை முடிந்த பின்னர், மக்கள் வந்து தீபாவளி ஷாப்பிங் செய்தால் கூட்ட நெரிசலும் இருக்காது. அதற்காகவே நாங்கள் முன் பதிவு முன் ஷாப்பிங் திட்டத்தை தொடங்கியுள் ளோம். எங்கள் கடைக்கு வருபவர்கள் 018-2439117 (தோப்பாசாமி) என்பவருக்கு தொலைப்பேசியின் மூலம் அழைத்து ஷாப்பிங் செய்யும் நேரத்தை சொல்லி விடலாம். அதற்காக நாங்கள் இங்கு பணி யாளர்களையும் அமர்த் தியுள்ளோம். இவ்வாறு தான் பாதுகாப்பான தீபாவளி ஷாப்பிங்கை மக்கள் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − five =