தீபக்கின் வழக்கை ரத்து செய்ய நஜிப் தம்பதியர் முறையீடு; மே மாதம் விசாரிக்கப்படும்

0

கம்பள வர்த்தகர் ஜேஆர் தீபக் ஜெய்கிஷன், நஜிப் ரசாக் தம்தியர் உட்பட மேலும் இருவருக்கு எதிராகத் தாக்கல் செய்திருக்கும் இழப்பீட்டு வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மே 14ஆம் தேதியன்று விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கு நேற்று நீதிமன்ற ஆணையர் குவாய் சியூ சூன் முன்னிலையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கோவிட்-19 நோயின் காரணமாக அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளதால், இந்த வழக்கு மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் அனைவரும் அந்த வழக்கில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று தங்களின் எதிர் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சோர், போஸ்டீட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனமான பாக்கிட் வீரா மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை ஜெய்கிஷனின் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று, 2018 அக்டோபர் 12 ஆம் தேதி எதிர் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
2018 அக்டோபர் 12ஆம் தேதி தீபக் ஜெய்கிஷனின் வழக்கின்படி, தமக்குச் சொந்தமான அஸ்தாசாங்கே நிறுவனம், பெட்டாலிங் மாவட்டம், புக்கிட் ராஜா முக்கிம், கிள்ளான், காப்பாரில் உள்ள 181.9 ஹெக்டரில் அமைந்த 3 துண்டு நிலங்களை வாங்க ஒப்பந்தம் செய்து, அதற்காக முன்பணமாக 13 மில்லியன் ரிங்கிட்டை அவான் மேகா நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரரான ராஜா ரொப்பியா ராஜா அப்துல்லாவிடம் செலுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த நிலத்தை வாங்க குவைத் நிதி நிறுவனத்தின் 72.3 மில்லியனுக்கான பங்குப் பத்திரங்களை மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்ததாக ஜெய்கிஷன் தெரிவித்திருந்தார்.
எனினும், அவான் மேகா நிறுவனம் அந்த நிலத்திற்கான அசல் நிலப் பட்டாவை தமது நிறுவனத்திற்கு வழங்காமல் ஏமாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். நிலத்தின் பட்டாவை ஒப்படைக்காமல் அவர்களின் சதி, முறைகேடு, குறுக்கீடு போன்றவற்றால் தமக்குச் சொந்தமான நிறுவனத்தின் 16 மில்லியன் பங்குகளை போஸ்டீட் ஹோல்டிங்ஸுக்கு வீரா மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் விற்க நெருக்குதல் தரப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்தச் சதித் திட்டத்தில் நஜிப் ரசாக்கும் ரோஸ்மா மன்சோரும் பெரும் பங்கு வகித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேற்கண்ட சதித் திட்டத்தின் காரணமாக, தமக்குப் பெரும் அளவிலான இழப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு ஈடாக, பொது இழப்பீடாக 60 கோடி ரிங்கிட்டும், முன்மாதிரியான இழப்பீடாக 5 கோடி ரிங்கிட்டும், கடுமையான சேத இழப்பீடாக 2.6 கோடி ரிங்கிட்டையும் பிரதிவாதிகள் தமக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 14 =