திவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்

பகடிவதையின் காரணமாக திவ்யநாயகி ராஜேந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முகநூல் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயனீட்டாளர் உரிமைக்குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அந்த 20 வயது இளம் பெண்ணிடம் பகடிவதை செய்த ‘ஜோக்கர் ஒருவன்’ என்ற முகநூல் கணக்கை வைத்திருந்த நபரின் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 306இன் கீழ், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு தொடுக்க முடியும் என்று இணைய பயனீட்டாளர் கழகத்தின் சட்ட ஆலோசகர் ஆர். விக்ரமன் தெரிவித்தார்.
பினாங்கு பல்பொருள் அங்காடியில் காசாளராகப் பணியாற்றி வந்த திவ்யநாயகி, வியாழக்கிழமை வங்காளதேச ஆடவருடன், இந்திப் பாடலுக்கு அபிநயம் பிடித்த காட்சி, பதிவாகி டிக்-டாக்கில் வீடியோவாகப் பதிவிடப் பட்டிருந்தது.
அதனை, ஜோக்கர் ஒருவன் எனும் நபர் ‘வங்காளதேச இளைஞ ருடன் எப்படி இந்தப் பெண் காதல் வலையில் விழலாம், அனைவரும் அவரை ஆசீர்வதிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 5 =