திறந்த வீட்டுக்குள் நுழைந்த சிங்கம்!

0

அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணம் சோனாரா நகரை சேர்ந்த எட்வர்ட் மற்றும் கேத்தி தம்பதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கள் வீட்டின் முங்கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டுக்குள் திலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, வீட்டினுள் வினோதமான சத்தம் கேட்பதை இருவரும் உணர்ந்தனர். அதனைத் தொடர்ந்து சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை தேடி போனார்கள். அப்போது கண்ட காட்சி அவர்களை பயத்தில் உரையவைத்தது.

அவர்களது வீட்டுக்குள் சிங்கம் ஒன்று சகஜமாக உலாவிக்கொண்டிருந்தது. அதை கண்டதும் இருவரும் பயத்தில் அலறினர். இதை கேட்டு பதறிய சிங்கம் வீட்டின் கழிவறைக்குள் ஓடிவிட்டது.

உடனே அந்த தம்பதி சாதுரியமாக செயல்பட்டு கழிவறையின் கதவை இழுத்து மூடினர். பின்னர் அவசரௌதவி எண்ணை தொடர்பு கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் கழிவறைக்குள் படுத்துக்கிடைந்த சிங்கத்தை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் அதனை கீண்டில் அடைத்து கொண்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =