திரெங்கானு முன்னாள் மந்திரி பெசார் வான் மொக்தார் காலமானார்

திரெங்கானு முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ வான் மொக்தார் அமாட் காலமானார்.
இருதயக்கோளாறு காரணமாக நேற்று காலை கோலாலம்பூரில் உள்ள பிரின்ஸ் கோர்ட் மருத்துவ நிலையத்தில் தமது தந்தை காலமானதாக அவரின் புதல்வர் வான் அப்துல் ஹக்கிம் தமது முகநூலில் பதிவேற்றம் செய்தார்.
நேற்று நண்பகல் தொழுகைக்குப் பின் ஷா ஆலம் செக்ஷன் 21இல் உள்ள முஸ்லிம் மையத்துக் கொல்லையில் தமது தந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
கோலதிரெங்கானுவைச் சேர்ந்த காலஞ்சென்ற வான் மொக்தார் (வயது 88) கடந்த 1974ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் திரெங்கானு மந்திரி பெசாராகப் பதவி வகித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =