திருமண வைபவங்களுக்கு அனுமதி

  நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (எம்சிஓ), நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (சிஎம்சிஓ), மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (ஆர்எம்சிஓ) அமலாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் திருமண வைபவங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தேசியப் பதிவிலாகா, வழிபாட்டுத் தலங்கள், முஸ்லிம் அல்லாத சமய சங்கங்களின் தலங்களில் திருமண வைபவங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசியப் பதிவிலாகாவின் அறிக்கை ஒன்று கூறியது.

  எம்சிஓ 2 காலத்தில் ஒத்தி வைக்கப்பட்ட திருமண வைபவங் களை நடத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த முடிவைச் செய்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையில் நடந்த ஒரு சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் கடுமையாக்கப் பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமலாக்கம் செய்யப் பட்டுள்ள பகுதிகளில் திருமண வைபவங்களை நடத்த அனுமதி இல்லை. திருமண வைபவங்களின் போது எம்சிஓ அமலில் உள்ள பகுதிகளில் கூடுதல் பட்சம் 10 பேர், சிஎம்சிஓ அமலாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் பட்சம் 20 பேர், ஆர்எம்சிஓ அமலாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் பட்சம் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவர். தேசியப் பதிவு இலாகாவில் திருமணப் பதிவு நிகழ்வுகளில் கூடுதல்பட்சம் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  seventeen − 15 =