
தனது ஊழியரான தாரணி குட்டி எனும் திருநங்கைக்கு எதிராக பாகுபாடு காட்டியதாகக் கூறப்படுவதை யூ.இ.எம். எட் ஜெண்டா பெர்ஹாட் எனும் நிறுவனம் நேற்று மறுத்தது.
தாரணி தமது ™முடியை குட்டை யாக வெட்டிக் கொள்ளும்படியும் வேலை நேரத்தில் ஆண்களின் ஆடையை அணியும்படியும் அந்நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் அவரைக் கட்டாயப்படுத்தியதாக கடந்த ஜனவரியில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்த விவகாரம் பற்றி அந்நிறுவனம் நேற்று அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதியன்று தாரணியை தனது மனிதவள அதிகாரிகள் சந்தித்தனர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
தம்மை யாரும் கட்டாயப் படுத்தவில்லை என்று அச்சந்திப் பின்போது தாரணி தெரிவித்தார். அது மட்டுமன்றி, ஆடைகளையோ உள்ளாடைகளையோ ஆபரணங் களையோ அகற்றும்படி மேலாளர்கள் எவரும் தம்மை வற்புறுத்தவில்லை என்றும் தாரணி தெரிவித்தார் என்று யூ.இ.எம். எட்ஜெண்டா நிறுவனம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.
என்னைப் பற்றிய செய்தி தவறாக வெளிவந்துள்ளது. அது குறித்து மிகவும் வருந்துகிறேன். நிறுவனத்தால் நான் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன் எனும் தோரணையில் அச்செய்தி எழுதப்பட்டுள்ளது. அது சரியல்ல என்று தாரணி தெரிவித்தார் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
பேரா மாநிலத்தின் ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றிலும் தாரணி பங்கெடுத்துள்ளார். அந்நிகழ்ச்சியில் சேலை அணிந்து அவர் பாரம்பரிய நடனமொன்றை ஆடினார். அந்நிகழ்ச்சி மருத்துவமனை இயக்குநரின் முன்னிலையிலும் மூத்த நிர்வாக அதிகாரிகளின் முன்னிலையிலும் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியை அவர்கள் அனைவரும் ரசித்துப் பார்த்தனர் என்றும் அந்த அறிக்கை கூறியது.
இதற்கு முன்பு, நிலுவையில் இருந்த தமது மிகைநேர ஊதியத்தை வழங்கும்படி கோரி அந்நிறுவனத்திற்கு எதிராக தாரணி வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வழக்கில் தாரணிக்கு ஆதரவாக தொழிலியல் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அந்த சர்ச் சையினால் தாரணி கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. அவர் தற் கொலை செய்து கொள்ளும் உணர்வுக்கும் தள்ளப்பட்டார். மனநல மருத்துவருடன் நடந்த கலந்தாலோசனைக்குப் பிறகு எட்டு நாட்கள் அவர் மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்டார்.