திருக்குறளை மேற்கோள்காட்டி தெலுங்கானா சட்டசபையில் தமிழிசை முதல் குரல்

டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்ற பிறகு அந்த மாநில சட்ட மன்றத்தின் முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது.

சட்டமன்றத்தில் உரை நிகழ்த்த சென்ற கவர்னர் தமிழிசையை முதல் மந்திரி சந்திரசேகரராவ், சபாநாயகர் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

தெலுங்கானா சட்டமன்றத்தில் முதல் தமிழ்க் குரலாக டாக்டர் தமிழிசையின் குரல் ஒலித்தது. அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் சொல்லிவிட்டு அதன் பிறகு தெலுங்கிலும் அந்தரிக்கு நமஸ்காரம் என்று கூறிவிட்டு தனது உரையை தொடங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

தெலுங்கானா சட்டமன்றத்தில் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன்

தனது பேச்சை முடிக்கும் போது ‘உறு பசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு’ என்ற திருக்குறளை தமிழில் கூறி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தார்.

அதிகமான பசி, ஓயாத நோய், அழிவை உருவாக்கும் பகை ஆகியவை இல்லாமல் இருப்பதே மிகச்சிறந்த நாட்டுக்கு அழகு என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − fifteen =