
இவ்வாண்டில் டிங்கி சம்பவங்கள் அதிகரிப்பு கண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டிங்கி இணையதளம் கூறியுள்ளது.
நாளொன்றுக்கு 360 பேருக்கு டிங்கி காய்ச்சல் கண்டுவருவதாக அந்த இணையதளம் கூறுகிறது. இவ்வாண்டில் இதுவரை 119,198பேருக்கு டிங்கி காய்ச்சல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 இல் 120,836 பேருக்கு டிங்கி காய்ச்சல் கண்டுள்ளது.
இவ்வாண்டு டிங்கி காய்ச்சலுக்குப் பலர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டில் 147 பேர் டிங்கி காய்ச்சலால் மரணமடைந்துள்ளனர்.இதனிடையே டிங்கி காய்ச்சலுக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சை கிடையாது என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். டிங்கி காய்ச்சல் கண்டு உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தால் குணமடையும் சாத்தியம் இருப்பதாக அவர் சொன்னார்.