தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன் – அதிர வைத்த அக்‌ஷய் குமார்

டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சினிமா, அரசியல் பிரபலங்களும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கும் முன்னர்கூட நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தற்போது பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அதில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்தில் டீ போட்டுக் கொடுத்ததாக அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.

பியர் கிரில்ஸ், அக்‌ஷய் குமார்

இந்நிலையில் பியர் கிரில்ஸ், அக்‌ஷய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ் வீடியோ சாட் செய்தனர். அப்போது, யானை சாணத்தில் போட்ட டீயை எப்படித் தான் குடித்தீர்களோ என்று ஹூமா, அக்‌ஷய் குமாரிடம் கேட்டார்.

அதற்கு அக்‌ஷய் குமார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் கூறியதாவது, நான் தினமும் மாட்டுக் கோமியம் குடிப்பதால், யானை சாண டீ எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றார். ஆயுர்வேத காரணங்களுக்காக தான் தினமும் கோமியத்தை குடிப்பதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 14 =