திடீர் தேர்தல் நாட்டின் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு அல்ல

0

திடீர் தேர்தல் தற்போதைய நாட்டின் அரசியல் பூசலுக்கு தீர்வு அல்ல என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் சிறுபான்மை அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ள தால், நாட்டின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படுவது இது சரியான தருணம் அல்ல என மலேசிய புத்ரா பல்கலைக்கழக பேராசிரியர் ஜாயும் ஜாவான் கூறினார்.
திடீர் தேர்தல் நடத்தப் பட்டாலும், எந்தவோர் அரசியல் கட்சியும் பெரும்பான்மையில் வெற்றிபெறப் போவதில்லை. பொதுத் தேர்தலுக்குப் பிறகும் இந்த அரசியல் நிலையற்ற நிலை நீடிக்கும் என்றார் அவர்.
புதிய தேர்தல் நடத்தப்பட்டால் அம்னோவைச் சேர்ந்த ஒருவர் தான் பிரதமராவார் என்பதை முஹிடின் உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் நடத்தப் பட்டால் முஹிடின் அல்லது முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பிரதமராகும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படாவிட்டாலும் முஹிடினுக்கு மகாதீர் தொடர்ந்து மிரட்டலாக இருந்து வருவார் என்பதில் சந்தேகம் இல்லை என மலாயா பல்கலைக்கழக பேராசிரி யர் அவாங் அஸ்மான் அவாங் பாவி கூறினார்.
புதிய பொதுத் தேர்தலை சந்திக்க முஹிடினின் பெர்சத்து கட்சியுடன் அம்னோ ஒருபோதும் சமரசமாகப் போகாது என அவர் குறிப்பிட்டார்.
காரணம் அம்னோ பிளவு பட்டதற்கு பெர்சத்து கட்சிதான் காரணம் என்பதால் அம்னோ உறுப்பினர்கள் ஆத்திரமடைந் துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெர்சத்து கட்சி 2ஆக பிளவுபட்டு பலவீனமடைந்துள்ள தால், பொதுத் தேர்தல் நடத் தப்பட்டால் பெர்சத்து தோல்வி யில் தான் முடிவடையும் என அவர் சொன்னார்.
ஒரு திடீர் தேர்தலை நடத்த பிரதமர் முஹிடின் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. அம்னோ மற்றும் பாஸ் தலை வர்களுடன் முஹிடின் இந்த விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக நம்பப்படுகிறது.

மேலும் விரிவான செய்திகளுக்கு தமிழ்மலர் நாளிதழை வாங்குங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − four =