திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் 18 வயதடைந்தவர்கள் தற்போது வாக்களிக்க முடியாது!

நாட்டில் திடீர்த் தேர்தல் நடைபெற்றால் 18 வயதை யடைந்தவர்கள் ஓட்டுப்போட இயலாது. ஏனெனில் அந்த முறை இன்னும் தயார் நிலையில் இல்லை என்று தேர்தல் ஆணையம் நேற்று கூறியது. தன்னிச்சையாக இயங்கும் வாக்காளர் பதிவு முறையும் 18 வயதுடையவர்களுக்கான வாக்களிப்பும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அடுத்த வருடம் மத்தியில்தான் இம்முறை தயார் செய்யப்பட்டு முறையாக செயல்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸார் அளிஸான் ஹருண் கூறினார்.

18 வயதில் வாக்களிக்கும் அத்திட்டம் தன்னிச்சை வாக்காளர் பதிவு டன் இணைந்துதான் செயல்பட முடியும். அதற்கான கட்டமைப்பை இன்னும் தயார் செய்து கொண்டு இருக் கிறோம் என்று அஸ்கார் தி மலேசியன் இன்சைட்டிடம் தெரிவித்தார். எங்களின் கணிப்புப்படி அம்முறை அடுத்த வருடம் மத்தியில் பூர்த்தி யாகும். எனினும் அதற்கு முன்பே பூர்த்தியாவதற்கு நாங் கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தனது 22 மாத ஆட்சி காலத்தில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வாக்களிக்கும் வயதை 18 ஆகக் குறைத்தது.

அவ்வயதையடைந்தவர்கள் தன்னிச்சையாகவே வாக்காள ராகப் பதிவு செய்யப்படுவதை யும் நம்பிக்கை கூட்டணி அரசு உறுதி செய்தது. 18 வயதுடையவர் வாக் களிக்க முடியுமா என்ற விவ காரம் தற்போது எழுந்துள்ளது. 14ஆவது தேர்தல் கடந்த மே 2018இல் நடைபெற்றது. இரண்டு வருடத்திற்குள் மலே சியர்கள் மறுபடியும் தேர்தலை சந்திக்கும் சாத்தியம் இருப் பதை முன்னிட்டு இக்கேள்வி எழுந்துள்ளது என்று தி மலேசி யன் இன்சைட் கூறுகிறது.

முஹிடின் கீழ் இயங்கும் அரசாங்கத்திற்கு 222 சீட்டுகள் கொண்ட மக்களவையில் போதுமான ஆதரவு இல்லாமல் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது என்று தி மலேசியன் இன்சைட் என்ற ஆன் லைன் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியது. தனது வேட்பாளரான துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு 114 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக நம்பிக்கை கூட்டணி கடந்த வார இறுதி யில் அறிவித்திருந்தது. எதிர் வரும் மார்ச் 9இல் கூட விருக்கும் மக்களவையில் நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நம்பிக்கை கூட்டணி தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவையில் முஹிடின் தமது கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க தவறும் பட்சத்தில் பேரரசர் இரண்டு நடவடிக்கை களில் ஒன்றை எடுக்கநேரிடும். ஒன்று மகாதீரை பிரதமராக நியமிப்பது அல்லது மக்க ளவையைக் கலைத்து திடீர் தேர்தலுக்கான அறிவிப்பை செய்வது ஆகும். இதற்கிடையே எந்நேரத் திலும் திடீர் தேர்தலை நடத்துவ தற்கு தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருக்கிறது என்று அஸார், தி மலேசியா இன்சைட்டிடம் தெரிவித்தார்.

அஸ்கார் மேலும் கூறுகை யில், கூட்டரசு அரசியலமைப் பின்படி மக்களவை கலைக்கப் பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட வேண்டும். இந்த திடீர்தேர்தல் நடத்தப்பட்டால் ரிம 750 மில்லியனிலிருந்து ரிம 800 மில்லியன் வரை செலவாகும். கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் ரிம 500 மில்லியன் செலவானது. இந்த தேர்தலில் 259,443 தற்காலிக தேர்தல் ஊழியர்கள் பணியாற்றினார்கள். 14.95 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =