திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

0

திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் படுதோல்வி கண்டதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதான் அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு என அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மக்கள் நடப்பு அரசாங்கத்தின் மீது தங்களின் அதிருப்தியை தெரிவித்துவிட்டதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இருப்பினும் இந்தத் தோல்விக்காக பிரதமர் துன் மகாதீருக்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பிற்கு எதிர்க்கட்சிகள் நெருக்குதல் தராது என முன்னாள் துணைப் பிரதமருமான அவர் தெளிவுபடுத்தினார்.
ஜனநாயகம் மற்றும் ஜனநாயக நடைமுறையை நாங்கள் நம்புகிறோம். தேர்தல் ஆணைய சட்டம் மற்றும் கூட்டரசு சட்டத்திற்கு ஏற்ப அனைத்தும் நடைபெற வேண்டும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
தஞ்சோங் பியாயில் பக்காத்தானின் படுதோல்வியைத் தொடர்ந்து திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அறிக்கையை தாம் வரவேற்பதாக ஸாஹிட் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை தஞ்சோங் பியாய் தொகுதியில் தேமு வெற்றியால் தாம் மனம் நெகிழ்ந்து போனதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =