தார் கல்லூரி பற்றி விவாதிக்க குவான் எங் தயாரா?

0

மசீசவின் கட்டுப்பாட்டில் இயங்கும் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகக் கல்லூரி சம்பந்தமாக விவாதிக்க நிதியமைச்சர் லிம் குவான் எங் முன் வருவாரா என மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் சவால் விடுத்துள்ளார்.
அண்மையில் அப்பல்கலைக்கழகக் கல்லூரிக்கு அரசின் மானியம் அளிக்க வேண்டுமானால் அது மசீசவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, முன்னாள் மாணவர்களும் நிதியமைச்சின் அதிகாரிகளும் உறுப்பியம் பெற்றிருக்கும் ஒரு சுதந்திர அமைப்பினால் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
மேலும் அப்பல்கலைக்கழகம் மசீசவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டால், இவ்வாண்டுக்கான அரசு மானியமாக 3 கோடி ரிங்கிட்டும் அடுத்தாண்டுக்கான 3 கோடி ரிங்கிட்டும் அப்பல்கலைக்கழகத்தின் பொது நிதியத்துக்கு வழங்கப்படும் என குவான் எங் தெரிவித்திருந்தார்.
அதற்கு, மறுமொழி அளித்த வீ கா சியோங், இதுகாறும் தார் பல்கலைக்கழகம் மசீசாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்துள்ளதாகவும் இனிமேலும் அப்படித்தான் இருக்கும் என குறிப்பிட்டார்.
லிம் குவான் எங்கும், அவரின் தகப்பனார் லிட் கிட் சியாங்கும் அந்தப் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு ஒரு காசையும் நன்கொடையாகக் கொடுத்தது இல்லையென்றும் அது பற்றி தம்முடன் விவாதிக்க குவான் எங் முன் வருவாரா என வீ கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here